சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபகாலமாக டிரெண்டிங்கில் வலம் வரும் இயக்குனர்களை தேர்வு செய்து கதைகளை நன்கு அறிந்து அவர்களுக்கு பட வாய்ப்பை கொடுக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சமீப காலமாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் சிறுத்தை சிவா உடன் இணைந்து அண்ணாத்த என்ற படத்தை வெற்றிகரமாக முடித்து உள்ளார்.
இந்த திரைப்படம் தீபாவளியை குறி வைத்துள்ளதால் ரசிகர்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக தேசிங்கு பெரியசாமி என்னும் இளம் இயக்குனருக்கு ரஜினி அடுத்த படத்தை கொடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் வெகு விரைவிலேயே தொடங்க இருக்கிறது.
படத்தின் கதை சுமாராக இருந்தாலும் கூட ரஜினியின் நடிப்பு மற்றும் ஸ்டைல் ஆகியவை படத்தின் வெற்றிக்கு எப்படியாவது அழைத்துச் சென்றுவிடும் அப்படித்தான் இது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் இருந்து இருக்கின்றன அதனால் தற்போது இருக்கும் இளம் இயக்குனர்களும் பயப்படாமல் களத்தில் இறங்கி வேலையை சிறப்பாக செயல்படுகின்றனர்.
அந்த நம்பிக்கையில்தான் தற்போது தேசிங்கு பெரியசாமியும் பயப்படாமல் ரெடியாக மிகப்பெரிய ஒரு டாப் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்க தில்லாக இறங்கியுள்ளார். இந்தநிலையில் 2006ம் ஆண்டு பா ரஞ்சித் கபாலி என்ற ஒரு மாபெரும் திரைப்படத்தை கொடுத்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் ரஜினியின் லுக் வேற மாதிரி இருந்தது ஆனால் இதுவரை நாம் பார்த்திராத கபாலி படத்தில் இருந்து ரஜினியின் புதிய லுக்புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
மேலும் அந்த படத்தில் இந்த லுக்கில் ரஜினியை பார்த்து இருந்தால் செம்மையாக இருக்கும் என பலரும் தற்போது கமெண்ட் எடுத்துக் கூறி வருகின்றனர் இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் செம்ம மாஸாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி.