தமிழ் சினிமாவில் டாப் நடிகரான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிவடைய உள்ளதால் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சிறந்து விளங்கின. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய்க்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் உடனுக்குடன் வந்து சேர்கின்றன.
அந்த வகையில் விஜய் 66வது திரைப்படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். விஜயின் 66 வது திரைப்படம் வம்சி இயக்குனர் இயக்க உள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச மாதம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் குறித்து ஒரு சுவாரசிய தகவல் ஒன்று கூறியுள்ளார். அந்த வகையில் விஜயிடம் ராஜு கூறிய இந்த படத்தின் கதை விஜய்க்கு ரொம்ப பிடித்து விட்டதாம். மேலும் இந்த கதையை கேட்ட விஜய் கடந்த இருபது வருடங்களில் நான் கேட்ட கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை இதுதான் எனவும்.
கதை சிறப்பாக உள்ளது எனவும் கூறியுள்ளாராம். இதுபோல் விஜய் கூறியது தில் ராஜுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. அந்த அளவிற்கு விஜய்க்கு செம்மையாக கதை கூறியுள்ளாராம் வம்சி. அதனால் தற்போது விஜய் ரசிகர்கள் பலரும் தளபதி 66 படத்திற்கும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.