தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா இவர் இந்து, காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ மின்சார கனவு, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, நினைவிருக்கும் வரை என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் கடைசியாக பொய்க்கால் குதிரை, தேள், மை டியர் பூதம், பொன் மாணிக்கவேல் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றது இந்த நிலையில் தற்பொழுது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் திரைப்படம் தான் பஹிரா இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் ஆர் வி பரதன் தயாரித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக கணேசன் சேகர் இசையமைத்து வருகிறார்.
இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பஹிரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2020 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா அவர்களுடன் இணைந்து அமிரா தஸ்தர், காயத்ரி சங்கர், ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன், சாக்சி அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். பகிரா திரைப்படம் கிட்டத்தட்ட மன்மதன் திரைப்படத்தை போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்பொழுது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது இந்த ட்ரெய்லரில் பிரபுதேவா பலவிதமான கெட்டப்களில் பெண்களை மயக்கி காதலிப்பது போல் நடித்துள்ளார்.
இதோ ட்ரெய்லர்..