பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளாரா.. ஷாலினி அஜித் – வெளிவந்த உண்மை தகவல்.

shalini-
shalini-

உண்மை மற்றும் நாவல் கதைகளை மையமாக வைத்து சூப்பரான படங்களை எடுத்தவர் இயக்குனர் மணிரத்தினம். தற்போது இவர் பொன்னியின் செல்வன் நாவல் கதையை மையமாக வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.

முதல் பாகம் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு செப்டம்பர் 30 ஆம் தேதி  வெளியாக ரெடியாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், நிழல்கள் ரவி, பிரபு, ரகுமான், நாசர் விஜயகுமார், லால், பார்த்திபன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, திரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே..

இந்த படத்தில் நடித்து அசத்தி உள்ளது. இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் நடித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகின இதனால் அஜித் ரசிகர்கள் இந்த செய்தியை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தினார்.

மேலும் ஷாலினி அஜித் நடிப்பது உண்மையா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள பல்வேறு ஷாலினியை சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வந்தனர் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பதில் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷாலினி அஜித் நடிப்பதாக வெளியான தகவல்களில் எதுவும் உண்மை இல்லை இது முற்றிலும் தவறான தகவல் என்றும் பொன்னியின் செல்வன் உட்பட எந்த ஒரு படத்திலும் ஷாலினி அஜித் நடிக்கவில்லை. முழுக்க முழுக்க வெளிவந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என உறுதியாக கூறப்பட்டது.