தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்த வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. விஜய் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல தோல்விகளை திரைப்படங்களையும் சில வெற்றி திரைப்படங்களையும் சந்தித்து வந்தார்.
அதன்பிறகு தனது விடாமுயற்சியாலும்,கடின உழைப்பினாலும் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.இந்நிலையில் இவர் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை உள்ள அனைத்து நடிகைகளும் இவரின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை படுவது வழக்கம்.
அந்த வகையில் விஜய் சேதுபதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஒரு நடிகை தற்பொழுது பேட்டி ஒன்றில் விஜய் படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். இந்நிலையில் மக்கள் செல்வன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் சங்க தமிழன் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருதவர் நடிகை ராஷி கண்ணா.
இத்திரைப்படத்திற்கு முன்பு அதர்வா, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து இருந்த இமைக்கா நொடிகள் திரைப்படத்திலும் ராஷி கண்ணா விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் ராஷி கண்ணா எனக்கு நடிகர் விஜய் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை என்று கூறியுள்ளார்.