கலக்கும் அரசாங்கம்!! அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன்!! அதிரடி அறிவிப்பு.

SMARTPHONE
SMARTPHONE

Hattsoff to government !! Smartphone for government school students !!: உலகம் முழுவதும் கோரனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருகிறது. இந்தநிலையில் அரசு பல புதிய திட்டங்களை இயற்றி வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை கிட்டத்தட்ட 4 மாதங்களாக நிறுத்திவக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் ஃகிளாஸ் மூலமாக பாடங்களை சொல்லிக் கொடுத்து வருகிறார்கள் ஆசிரியர்கள். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வசதி இல்லாத காரணத்தினால் ஆன்லைன் கிளாஸ் எடுக்காமல் இருக்கிறார்கள்.

இதனை அறிந்த பஞ்சாப் மாநிலம் அதிரடியாக பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் மாதத்திற்குள் 1.78 லட்சம் ஸ்மார்ட் போன்கள் இலவசமாக அங்குள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்து தமிழ் திசை நாளிதழ் இந்த செய்தியை தெரிவித்துள்ளது.

தற்பொழுது 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்  முதல்கட்டமாக வழங்கப்படும் என்றும் மீதி ஸ்மார்ட்போன்கள் நவம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த ஸ்மார்ட்பனில் டச் ஸ்கிரீன், கேமரா, அரசு செயலிகள், 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாட திட்டங்கள் ஆகியவை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.