தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் யோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவருடைய இயக்கத்தில் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிகவும் பம்பரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படப்பிடிப்பிலிருந்து சில திரைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இப்படிப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் கார்த்திக்கை வைத்து கைதி படத்தினை இயக்கி இருந்த நிலையில் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கார்த்தியின் குரல் பயன்படுத்தி இருந்தனர்.
எனவே லியோ திரைப்படத்தில் விக்ரம் படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களை பயன்படுத்துவார்களா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அந்த வகையில் லியோ படத்தில் கமல், கார்த்தி, சூர்யா என மூன்று கதாபாத்திரங்களும் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் நடிகர் விஜய் ரஜினியை போலவே தன்னுடைய படத்தில் அவர் மட்டும்தான் தனித்துவமாக இருக்க வேண்டும் என எப்பொழுதும் நினைக்கக் கூடியவர் இதன் காரணமாக கமல், சூர்யா போன்றவர்கள் நடிக்க விஜய் சம்மதிக்க மாட்டார் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
நடிகர், நடிகைகள், கதை, திரைக்கதை என அனைத்து விஷயங்களையும் லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் தானாக முடிவெடுத்து செய்து வருகிறார். இந்த படத்தில் கமல் எந்த ஒரு முடிவையும் எடுக்காத நிலையில் இந்த படம் நல்ல வரவேற்பினை பெரும் என கூறப்படுகிறது. அந்த வகைகள் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தன்னுடைய ஸ்டைலில் முழுக்க முழுக்க உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.