தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித்குமார் இவர் ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து உள்ளார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய இரண்டு திரைப்படங்களின் மூலம் இவர்களது கூட்டணி தொடர்ந்தது அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இதே கூட்டணி தற்போது தொடர்ந்து இருக்கிறது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ள துணிவு திரைப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒவ்வொரு அப்டேட்டுகலும் வெளியாகி கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள சில்லா சில்லா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை வைசாக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சிபி, அமீர், பாவணி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சில்லா சில்லா பாடல் வெளியான பிறகு சில்லா சில்லா பாடலை விட அடுத்த பாடல் இன்னும் மரண குத்தாக இருக்கும் என தகவல் வெளியாகி இருந்தது. அந்த வகையில் சமீபத்தில் ஜிப்ரான் அவர்கள் துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பாடல் “காசேதான் கடவுளடா” என தொடங்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
இவருடைய இந்த ட்விட்டர் பதிவே செம்ம வைரல் ஆனது இந்த நிலையில் பட குழுவினர் இன்று “காசேதான் கடவுளடா” பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளனர் அந்த வகையில் காசேதான் கடவுளடா பாடல் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
மேலும் இந்த பாடளையும் வைசாக் அவர்கள்தான் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காசேதான் கடவுளடா பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 916k பார்வையாளர்களை கடந்து 272k லைக்குகளை குவித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.