பிக் பாஸுக்கு பின் நடிகை லாஸ்லியாவின் சொத்து மதிப்பு இவ்வளவு அதிகரித்து உள்ளதா.?

losliya
losliya

விஜய் டிவியில் எப்பொழுதும் புதுவிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம் அப்படி யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் நிகழச்சியை அறிமுகப்படுத்தியது. அதனை பிரபலப்படுத்த கமலஹாசனை தொகுப்பாளராக நியமித்தன் மூலம் அது மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பல முன்னணி பிரபலங்களை களத்தில் இறக்கியது. அதனால் ரசிகர்கள் ஈ கூட்டம் போல் மேய்க்கத் தொடங்கினர்.

இதை ஆண்டுதோறும் சீசன் சீசனாக தொடங்கி தனது TRB ஏற்றிக்கொண்டது. தற்போது மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் நான்காம் கட்ட சீசன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மூன்றாவது சீஸனில் மிகவும் பிரபலமடைந்த நபர்கள் சிரபாகாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலரும் பாதியிலேயே வெளியேறினர். இதில் சற்றும் எதிர்பாராத இலங்கை பெண்ணான லாஸ்லியா ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தோடு மட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டினுள் சிறப்பாக பயணித்தார்.

இதன் மூலம் அவருக்கு ஆர்மி தொடங்கப்பட்டன எனினும் டைட்டிலை வெற்றி பெறாமல் வெளியே வந்தாலும் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் இவருக்கு ஆதரவுகள் அதிகரித்தன மேலும் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின அந்த வகையில் ஆக்சன் கிங் அர்ஜுன் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளராக சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் ஆகியோருடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் இத் திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது நடிகர் ஆரியுடன் இணைந்து தற்போது ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட பட வாய்பபுகள் தற்போது குவிந்து வருகின்றன.

இதனால் குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் கமிட்டானார் நடிகைகள் ஒருவராக தற்போது பார்க்கப்படுகிறார்கள். இவர் இது வரையிலும்  3 படங்களில் நடித்து உள்ள நிலையில் இவரின் சொத்து மதிப்பு பற்றிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

இவர் ஒரு படத்திற்காக சுமார் 25 லட்சம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி பார்க்கும் போது பிக் பாஸ்க்கு பின் இவர் சுமார் 50 லட்சம் சொத்து சேர்த்துள்ளார் என்று தெரியவருகிறது. இது அதிகாரபூர்வமான தகவல் அல்ல பலதரப்பட்ட தரப்பில் இது கூறப்பட்ட செய்தியாக இருந்து வந்தது அதை நாங்கள் தற்போது தொகுத்து வழங்கியுள்ளோம்.