தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக இன்று திரைக்கு வந்துள்ளது. வாரிசு திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் அந்த வகையில் படத்தைப் பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளாரா விஜய் என்பதை இங்கே காணலாம்.
படத்தின் கதை
படத்தில் சரத்குமார் ராஜேந்திர குரூப் ஆப் கம்பெனியின் உரிமையாளராக நடித்துள்ளார். அதேபோல் சரத்குமாருக்கு மூன்று மகன்கள் மூத்த மகன் ஸ்ரீகாந்த் இரண்டாவது மகன் சாம் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் கடைசியாக தான் தளபதி விஜய். ஸ்ரீகாந்த் ஜெய் என்ற கதாபாத்திரத்திலும் ஷாம் அஜய் என்ற கதாபாத்திரத்திலும் விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் என்கின்ற ராஜேந்திர பழனிச்சாமி தனக்குப் பிறகு தன்னுடைய கம்பெனியை தன்னுடைய இரு மகன்களைப் போல் தன்னுடைய மூன்றாவது மகனையும் பார்த்துக் கொள்ளும்படி கூறுகிறார் விஜய்யிடம் ஆனால் விஜய் அதை மறுக்கிறார் நான் தன்னுடைய தந்தையின் பாதையில் செல்ல விரும்பவில்லை தனக்கென ஒரு தனி பாதையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறுகிறார் இதனால் கோபமடையும் சரத்குமார் வீட்டை விட்டு விஜய்யை வெளியே அனுப்புகிறார்.
வீட்டை விட்டு வெளியே சென்ற விஜய் புதிதாக ஸ்டார்ட் அப் கம்பெனி ஒன்றை துவங்கி அதில் சாதிக்க முயற்சி செய்து வருகிறார் அந்த தருணத்தில் சரத்குமார் அவர்களுக்கு கேன்சர் என அவருடைய குடும்ப மருத்துவர் பிரபு மூலம் தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு சில மாதங்களுக்கு பிறகு தனக்குப் பிறகு தன்னுடைய கம்பெனியை யார் நிர்வாகம் செய்யப் போகிறார் அதற்கு யாரை செலக்ட் செய்யலாம் என நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்.
இந்த சமயத்தில் தன்னுடைய மனைவி ஜெயசுதா ஆசைப்பட்டபடி தங்களுக்கு அறுபதாவது திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளார் சரத்குமார் இந்த அறுபதாவது திருமணத்தில் எப்படியாவது தன்னுடைய மூன்றாவது மகன் விஜய்யை வரவழைக்க வேண்டும் என பிளான் போடுகிறார் அதே போல் சரத்குமார் விஜய்யும் தன்னுடைய அறுபதாவது திருமணத்திற்கு அழைக்கிறார் ஆனால் அறுபதாவது திருமணத்தில் சரத்குமார் வீட்டில் பெரிய பூகம்பம் வெடிக்கிறது எதனால் மூத்த மகனும் இரண்டாவது மகனும் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடைய கம்பெனியை யாரிடம் ஒப்படைப்பது என சரத்குமார் தவிக்கிறார் இந்த நேரத்தில் தன்னுடைய மூன்றாவது மகன். புதிய ஸ்டார்ட் அப் கம்பெனி மூலம் சாதித்துள்ளதை டிவி செய்தியில் பார்க்கிறார் சரத்குமார் அதன் பிறகு தன்னுடைய கம்பெனி முழு பொறுப்பையும் தன்னுடைய மூன்றாவது மகன் விஜய்யிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார் முதலில் மறுத்த விஜய் அதன் பிறகு தன்னுடைய அப்பாவின் சூழ்நிலை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார் அதன் பிறகு சரத்குமார் இறந்தும் விடுகிறார்.
கம்பெனியை கையில் எடுத்த தளபதி விஜய் வில்லன் பிரகாஷ் ராஜால் எத்தனை பிரச்சனைகள் வருகிறது இதற்கு முன் என்னென்ன பிரச்சனைகள் வந்தது விஜய் உடன் கூட பிறந்தவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தார்களா அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்தார்களா என்பதுதான் படத்தின் மீதி கதை.
தளபதி விஜய் செம மாஸ் ஆன ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி உள்ளார் அது மட்டுமில்லாமல் காமெடி எமோஷன் சென்டிமென்ட் என பின்னி பெடல் எடுத்து விட்டார் மொத்த படத்தையும் ஒன் மேன் ஆர்மியாக தூக்கி நிற்கிறார். தந்தை மகனுக்கு உள்ள பாசம் தாய் மகன் பற்றிய காட்சி என அனைத்திலும் சிறப்பாக நடித்துள்ளார் தளபதி விஜய். அதிலும் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டிவிட்டார். படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை அதேபோல் ரொமான்ஸ் காட்சிகளும் பெரிதாக எடுபடவில்லை.
என்னதான் ரசிகர்கள் மத்தியில் கிளாமரில் நடித்தாலும் ரசிகர்கள் பேசும்படி பெரிதாக காட்சிகள் இல்லை ஆனால் நடனத்தில் பட்டையை கிளப்பி விட்டார். படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் விஜய்க்கு பிறகு யோகி பாபு தான் ஏனென்றால் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காட்சிகள் திரையரங்கில் கைத்தட்டலை அள்ளுகிறது. மேலும் மூத்த நடிகர்களான சரத்குமார் மற்றும் ஜெயசுதா இருவரும் தங்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
ஆனால் வில்லனாக பிரகாஷ்ராஜ் பெரிதாக மிரட்டவில்லை அவருக்கு வில்லன் கேரக்டர் பெரிதாக கொடுக்கப்படவில்லை என்பது தான் நிசித்தமான உண்மை அதேபோல் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் இருவரும் அண்ணன் கதாபாத்திரத்தில் அம்சமாக நடித்துள்ளார்கள் பிரபு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிகவும் கச்சிதமாக நடித்துள்ளார் சங்கீதாவிற்கு நல்ல ரோல் என்றாலும் சம்யுக்தாவிற்கு பெரிதாக ஸ்கோப் இல்லை. கேமியோ ரோலில் வரும் எஸ் ஜே சூர்யா திரையரங்கை அதிர வைத்து விட்டார்.
எஸ் ஜே சூர்யாவிற்கு பிறகு குஷ்பூ கேமியோ ரோலில் இடம்பெறவில்லை அது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது இயக்குனர் வம்சி குடும்பம் என்றால் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என அழகாக தன்னுடைய படத்தின் மூலம் காமித்துள்ளது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது. திரைக்கதையில் சிறிது சொதப்பல் இருந்தாலும் முதல் பாதியில் இடம் பெற்ற காட்சிகள் சரியாக இல்லை என்றாலும் இரண்டாவது பாதியில் விட்டதை பிடித்து விட்டார் இயக்குனர் வம்சி.
தெலுங்கு சினிமாவில் அரைத்த மாவை அரைப்பது போல் என்னதான் கமர்சியல் திரைப்படமாக இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகளில் கொஞ்சம் நியாயம் வேண்டாமா எனக் கேட்கும் அளவிற்கு சண்டை காட்சிகள் அமைந்துள்ளது தெலுங்கு சினிமாவில் பல வருடங்களாக அரைத்த மாவை தான் தற்போது தமிழிலும் அறைத்துள்ளார்கள்.
தமன் ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி பாடல் மிகவும் சூப்பராக வொர்க் அவுட் ஆகியுள்ளது அதேபோல் விஜய்க்கு கொடுத்துள்ள பிஜிஎம் மியூசிக் திரையரங்கில் தெரிகிறது மொத்தத்தில் படத்தை குடும்பங்களுடன் சென்று பார்க்கலாம்.