வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியாகி திரைப்படம்தான் வலிமை இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் அஜித் நடிப்பை பாராட்டாதவர்களே கிடையாது. அந்த அளவு அஜித்தின் உழைப்பு இந்த திரைப்படத்தில் இருந்தது.
மேலும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாக்கிய வலிமை திரைப்படம் பலருக்கு பிடித்தாலும் ஒரு சிலர் விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்வதை பார்த்த பல பிரபலங்கள் அவரை கிழித்து எடுத்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ரசிகர்களும் புளு சட்டை மாறனை கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள்.
மேலும் படத்தில் அதிக எமோஷனல் காட்சிகளில் இருந்ததால் அதனை நீக்கி இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். என்னா தன் பலர் கருத்துத் தெரிவித்தாலும் வசூலில் வலிமை திரைப்படம் கல்லா கட்டி வருகிறது. இந்தநிலையில் அஜித் மீண்டும் வலிமை திரைப்படத்தின் இயக்குனர் வினோத் அவர்களுடன் அஜித் 61 திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார் மேலும் இப்படத்திற்காக சென்னையில் மிகப்பெரிய அளவில் செட் ஒன்றை உருவாகி வருவதாகவும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் படக்குழு கூறியுள்ளார்கள். மேலும் இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு ஒவ்வொரு காட்சியும் பிடித்ததாக இருக்க வேண்டுமெனவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமையவேண்டும் எனவும் கூறியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.
மேலும் அஜித் மூன்றாவது முறையாக வினோத் அவர்களுடன் இணைவதால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது இந்த நிலையில் வலிமை படத்தில் அஜித்திற்கு தங்கையாக சுனைனா நடித்துள்ளார் இவர் வேறு யாரும் கிடையாது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு அம்மன் திரைப்படத்தில் நடித்திருப்பவர் தான்.
அம்மன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் அம்மன் திரைப்படத்தில் நடித்த பொழுது இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவு மிகவும் பிரபலம் அந்த திரைப்படம். இந்த நிலையில் வலிமை திரைப் படத்தில் அஜித்திற்கு தங்கையாக இவர் நடித்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களா அது என ஆச்சரியத்துடன் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.