வெந்து தணிந்தது காடு படத்திற்காக “இத்தனை கிலோ” உடல் எடையை குறைத்துள்ளாரா சிம்பு.? உண்மையை சொன்ன தயாரிப்பாளர்.!

simbu
simbu

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு ஹீரோவாக பல சிறந்த படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இப்படி பல சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து ஓடிக் கொண்டிருந்த சிம்பு திடீரென அதிக அளவு வெயிட் போட்டுள்ளார்.

அதனால் அவருக்கு அதிக திரைப்பட வாய்ப்புகள் அப்போது கிடைக்காமல் இருந்தது அப்படி மீறியும் கிடைத்த ஒரு சில திரைப்படங்களும் அவருக்கு தோல்வியை கொடுத்தன. இதனால் சிம்பு கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடலை குறைத்து பின்பு மாநாடு என்ற ஹிட் படத்தை கொடுத்தார். இந்த படம் அவரது கேரியரில் ஒரு முக்கிய படமாக பார்க்கப்பட்டது.

வசூலும் 100 கோடிக்கு மேல் அள்ளி பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தன. அதில் ஒன்றாக கௌதம் மேனன் உடன் இணைந்து வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்த நிலையில் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார்.

இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நேற்று படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் டீசர் வெளியாகியது இதில் படக்குழு மற்றும் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பலரும் படம் குறித்தும் மற்றும் சிம்பு குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பதிவிட்டனர். அப்போது பேசிய இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்பு இந்த படத்தில் நடிப்பதற்காக சுமார் 23 கிலோ எடை வரை குறைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்ட சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு சிம்பு ரசிகர்கள் வரை பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.