நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் வந்தியதேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கார்த்தி இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்று வந்த நிலையில் அடுத்ததாக சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதில் கார்த்தி, ராசி கண்ணா, லைலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சர்க்கார் திரைப்படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது தற்போது ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதை தற்போது நாம் விரிவாக பார்ப்போம்.
சர்தார் திரைப்படத்தில் கார்த்தியின் நடிப்பு எதிர்பார்க்காத அளவிற்கு இருப்பதாகவும் இடைவெளி காட்சி வேற லெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் கார்த்தி அவர்கள் இந்த திரைப்படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் நடித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் சமீப காலங்களாக நடிகர் கார்த்தி அவர்கள் தேர்ந்தெடுத்து நடித்துவரும் கதைகள் அனைத்தும் அவருக்கு பொருத்தமாக இருப்பதாக அவரை பாராட்டி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த படம் தற்போது ரசிகர்களை மட்டுமல்ல திரை பிரபலங்களையும் கவர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக ஒரு ரசிகர் இடைவெளி காட்சியை பார்த்துவிட்டு அவர் கூறியுள்ளது தற்போது இணையத்தில் வெளியாகிய பரவி வருகிறது அதாவது இடைவேளை காட்சியின் போது தண்ணீர் பாட்டில் வாங்க வெளியே செல்லும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து தண்ணீர் பாட்டிலை வாங்குங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதுதான் சமுதாயத்திற்கு மிக முக்கியமான கருத்தை சொல்லி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதான் சர்தார் படத்தின் முழு கதை கரு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.