அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிஷிக்கு காதல் தோல்வி ஏற்பட்ட காரணத்தினால் தான் இவ்வளவு நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்திருக்கிறார் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ஷாலினி சின்ன வயதில் இருந்து திரைப்படங்களை நடித்து வரும் நிலையில் இவருக்கு ஷாமிலி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற தம்பியும் இருக்கிறார். அப்படி ஷாமிலி அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான நிலையில் அதன் பிறகு மேலும் சில திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு வீர சிவாஜி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக விக்ரம் பிரபு ஜோடியாக நடித்துவிட்டு பிறகு சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.
இவரைத் தொடர்ந்து ரிச்சர்ட் ரிஷி பெரிதாக இவருடைய படங்கள் அவருக்கு என அடையாளத்தை தரவில்லை இப்படிப்பட்ட நிலையில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2020ஆம் ஆண்டு வெளியான நிலையில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது இருந்தாலும் இதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது.
இதனை அடுத்து மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் படும் தோல்வியினை சந்தித்தது. இப்படிப்பட்ட நிலையில் ரிச்சர்ட் ரிஷிக்கு காதல் முறிவு ஏற்பட்டிருக்கிறது. அதாவது பாடலாசிரியர் கண்ணதாசனின் பேத்தி சத்யலட்சுமி என்பவர் உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து நின்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சத்யலட்சுமியின் தந்தையும் நடிகர் ரிச்சர்ட்டின் தந்தையும் குடும்ப நண்பர்களாம் இதன் காரணமாக இருவருக்கும் ஆரம்பித்த பழக்கம் காதலாக மாற பிறகு இரு விட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்ததாம். அதன்படி கடந்த 2012ஆம் ஆண்டு ரிச்சர்ட் ரிஷிக்கும் சக்திலட்சுமிக்கும் திருமணம் நிச்சயமானது.
இவர்களுடைய நிச்சயதார்த்தத்தை அஜித் முன் நின்று நடத்தி வைத்திருந்த நிலையில் ஆனால் பிறகு ரிச்சர்ட்டுக்கும் சத்திய லட்சுமிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே தான் சிங்கிளாக இருந்து வந்துள்ளார். தற்பொழுது ரிச்சர்ட் ரிஷி மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் யாஷிகா ரிச்சர்ட் தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.