90 கால கட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் காதல், ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் ரசிகர்களை தற்போதும் கவர்ந்தவர் இயக்குனர் மணிரத்தினம். கடைசியாக இவர் தமிழில் செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து மணிரத்னம் தற்போது வரலாற்று கதையை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார். அதை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு எடுத்துள்ளார் அந்த பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டியுள்ளார் இந்த படத்தில் நடிகர், நடிகைகள் நடிகின்றனர் : அந்த வகையில் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், சரத்குமார், விக்ரம், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, திரிஷா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் அசத்தி உள்ளனர்.
இந்த படத்தில் வித்தியாசமாக நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாற்று கதை என்பதால் தற்போது மக்கள் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படக்குழு தற்போது படத்தின் சூட்டிங்கை விறுவிறுப்பாக முடித்துவிட்டு தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளது.
அதாவது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தற்போது டப்பிங் பேசி வருகின்றன என்ற தகவல் அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை திரிஷா “மைடியர் செந்தமிழ்” என்ற வார்த்தையை கேப்ஷன்னாக போட்டு டப்பிங் சொல்லும் இடத்தில் எடுத்தார்.
இப்புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..