தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24ஆம் தேதி ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது அந்த வகையில் இந்த வைரஸ் ஆனது மிகவும் வேகமாக மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டதாகும் இந்த வகையான வைரஸை எந்த ஒரு தடுப்பூசிகளும் கட்டுப்படுத்தாது எனவும் விஞ்ஞானிகள் கூறி உள்ளார்கள்.
இந்நிலையில் அந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டின் அரசானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வைரஸ் எவ்வளவு அதிகமான ஆபத்து உள்ளதோ அதேபோல அதைவிட அதிகமான ஆபத்து இந்த வைரஸிற்கு உண்டு என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அந்த வகையில் இது முப்பத்தி மூன்று முறை உருமாற்றம் செய்து தற்போது ஒமைக்ரான் ஆக பரவி வருகிறது அந்தவகையில் இந்த வைரஸ் ஆனது தற்போது பிரிட்டன் ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிவேகமாக பரவி உள்ளது.
இந்நிலையில் நமது தமிழகத்தில் இந்த வகையான வைரஸ் பரவாமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வரும் அதுமட்டுமில்லாமல் சர்வதேச விமான நிலையங்கள் முழுவதும் கண்காணிப்பு மிகத்தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சிங்கப்பூர் பிரிட்டன் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பயணிக்கும் பணியாளர்களை மிக தீவிரமாக கண்காணிப்பது மற்றும் இல்லாமல் அவர்களுக்கு தொற்று இருக்கிறதா அதை கண்டு அறிவதற்காக விமான நிலையத்திலேயே அவர்களுக்கென தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது இந்நிலையில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிவதற்காக அவருடைய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆய்விற்கு பிறகு இவருக்கு எந்த வகையான தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.