பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்திருப்பதை பார்த்திருப்போம். அந்த வகையில் ஒரு சில நடிகர்களை நாம் பார்க்கும் பொழுது இவர் அந்த விளம்பரத்தில் நடித்தவரச்சே என பலரும் கூறுவதை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் அடிக்கடி நாம் பார்க்கும் ஒரு விளம்பரம்தான் ஹமாம் சோப்பு விளம்பரம் இந்த விளம்பரத்தை நாம் பலமுறை பார்த்தது மட்டும் இல்லாமல் அந்த வகையில் ஹமாம் சோப் விளம்பரத்தில் வரும் அம்மாவைப் போல் நம்ம அம்மா ஏன் இருக்க மாட்டார்கள் என பலரும் ஏங்கியது உண்டு.
அந்த வகையில் அந்த ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்த நடிகை புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து பல மீம்ஸ்களை கிரேட் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் பல்வேறு திரைப்பட காமெடி களை வைத்து அவரை கலாய்த்து வருவது மட்டும் இல்லாமல் அச்சம் இல்லை ஓடு ஓடுன்னு சொல்லிட்டு நீ அங்க தம் அடிச்சுட்டு இருக்கீங்களா என அவரை கண்டமேனிக்கு மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பெமீனா மிஸ் இந்தியா என்ற போட்டியில் கலந்து கொண்டு ஃபைனல் வரைக்கும் சென்றது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் தமது நடிகை சமீபத்தில் நாடகம், திரைப்படம் என பல துறைகளிலும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி வருகிறார்.
அந்தவகையில் இவர் தமிழ் சினிமாவிலும் கூட ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் அதாவது ஜெயங்கொண்டம் திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.