பா ரஞ்சித் அடுத்த படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்துள்ளாரா.? யார் யார் அது தெரியுமா.?

ranjith
ranjith

பா. ரஞ்சித் முதலில் புதுமுக நடிகர்களை வைத்து “அட்டக்கத்தி” என்ற காதல் சம்பந்தப்பட்ட ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அதன் பிறகு டாப் நடிகர்கள் பலரும் இவரை கவனிக்கத் தொடங்கினர் அந்த வைகையில் நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து காலா, கபாலி என அடுத்தடுத்த படங்களை கொடுத்தார்.

தமிழில் தனது திறமையை வெளிக் காட்டிக் கொண்டிருந்த இவர் கடைசியாக ஆர்யாவை வைத்து “சார்பட்டா பரம்பரை” எனும் ஒரு அசாதாரணமான படத்தை கொடுத்து அசத்தியுள்ளார் இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் முழுக்க முழுக்க காதல் மையப்படுத்தி இருக்கும் ஒரு படத்தை எடுக்க உள்ளார்.

அந்தத் திரைப்படத்திற்கு “நட்சத்திரம் நகர்கிறது” என பெயர் வைத்துள்ளார். அதிரடியான குத்துச் சண்டை படத்தை எடுத்த பிறகு காதல் படத்தை எடுப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல ஆனால் அதை செய்ய தற்போது இவர் ரெடியாக இருக்கிறார்.

இத்திரைப்படத்திற்காக நடிகர், நடிகைகளையும் தேர்வு செய்துள்ளார் அந்த வகையில் மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் ஜெயராமன் அவரின் மகன் காளிதாஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.

துஷாரா விஜயன் ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் ஒரு சூப்பரான ரோலில் நடித்தார். இந்த படத்தில் அவர் இணைந்து உள்ளது படதிற்கான வெற்றியாக பார்க்க படுகிறது.