ஆயிஷாவிற்கு ஏற்கனவே இத்தனை முறை திருமணம் நடந்து விட்டதா.? உண்மையை உடைத்த காதலர்..

aayisha

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக ஆயிஷாவும் பங்கு பெற்றுள்ளார் இப்படிப்பட்ட நிலையில் இவர் குறித்து இவருடைய முன்னாள் காதலர் கூறியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலலாகி வருக்கிறது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் திறமையான போட்டியாளரான ஆயிஷா தொலைக்காட்சி சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் அப்பொழுது அந்த சீரியலில் இயக்குனருடன் இவருக்கு பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து மாயா என்ற சீரியலில் நடித்த வந்தார் இந்த சீரியலை இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்யா என்ற சீரியலின் மூலம் தான் புகழின் உச்சத்துக்கு சென்றார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சிகள் பங்கு பெற்று வரும் ஆயிஷா வாரம் வாரம் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு கமலஹாசனிடம் அட்வைஸ் வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

aayisha-boy-friend
aayisha-boy-friend

இப்படிப்பட்ட நிலையில் சென்ற வாரம் இவர் கமலஹாசனுக்கு ஏட்டிக்கு போட்டியாக பேசியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் ஆயிஷாவின் முன்னாள் காதலருல் ஒருவரான தேவ் சமீப பேட்டி ஒன்றில் என்னுடன் ஆயிஷா நான்கு வருடங்கள் இருந்தார் என்றும் அவரை சீரியலில் அறிமுகம் செய்ததே நான் தான் எனவும் எங்களுடைய காதல் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென சத்யா சீரியலில் நாயகன் விஷ்ணு இடையில் வந்ததால் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது என்றும் இப்பொழுது விஷ்ணுடன் கூட ஆயிஷா இல்லை என்று தான் கேள்விப்பட்டேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

பிறகு ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகிவிட்டது என்றும் அதை மறைத்து தான் என்னுடன் பழகினார் என்றும் இப்பொழுது என்னுடைய தங்கையின் காதலரான யோகேஷனை காதலித்து வருவதாகவும் கேள்விப்பட்டேன் என்று தேவ் சமீப பேட்டையில் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு ஆயிஷாவின் காதலர் தேவ் கூறியது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை ஆனால் இவர் கூறிய தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.