கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அடிபணிந்தாரா அஜித்.! அப்போ இதுக்கு பேர் என்ன கிழித்து தொங்கவிடும் நெட்டிசங்கள்…

ajith
ajith

அஜித் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடு உள்ளது லைக்கா நிறுவனம். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ஏகே 62 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்க உள்ளார் என்பதும்  தெரிந்தது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறபடுகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் அவர்கள் கார்ப்ரேட் கம்பேனியிடம் அடிபணிந்துள்ளார் என்று அஜித்தை நெட்டிசங்கள் வருதேடுக்கின்றனர். அதாவது ஏற்கனவே லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்த அஜித் தற்போது ஏகே 62 படத்தை லைக்கா நிறுவனத்திடம் எப்படி ஒப்படைத்தார் என்று நெடிசங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. அஜித் அவர்கள் இதுபோன்ற கார்பரேட் கம்பெனிக்கு எப்படி இதை ஒப்படைத்தார். இந்த நிலையில் சற்று முன் லைக்கா தனது titter பக்கத்தில் துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அஜித் படத்துடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுவரைக்கும் அஜித் படத்தை தயாரிக்காத லைக்கா நிறுவனம் தற்போது அஜித் படத்தில் வாய்ப்பு கொடுத்தது எப்படி என பல கேள்விகளை நெடிசங்கள் எழுப்பி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தை வெளிநாடுகளில் லைகா நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இப்போதே அதற்கான புக்கிங் செய்யும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்பதை இதன் மூலம் உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ஏகே 62 படம் குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.