தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றுநிலையில் தற்பொழுது இவர் துணிவு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார் அஜித். இந்த திரைப்படத்தினை மூன்றாவது முறையாக ஹெச். வினோத் இயக்க போனிகாபூர் அவர்களின் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது.
மேலும் துணிவு திரைப்படம் கேங்ஸ்டர் திரைப்படம் எனவும் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் பாடல்கள் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் ரிலீஸ்சாக இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்.
மேலும் துணிவு திரைப்படம் வெளியாகும் அன்று வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ள நிலையில் இருதரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து துணிவு, வாரிசு திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் துணிவு திரைப்படத்தில் அஜித்துடன் பணியாற்றிய பிரபலம் ஒருவர் சில தகவல்களை பகிர்ந்து உள்ள நிலையில் அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது துணிவு திரைப்படத்தின் சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் கடலில் போட் ஒட்டுவது இடம்பெற்று இருந்தது எனவே அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ரசிகர்கள் டூப் போட்டு அஜித் நடித்திருக்கிறார் என கூறப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் பணியாற்றியுள்ள நபர் ஒருவர் இவ்வாறு அஜித் அந்த கடலில் போட்டிங் செய்வதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எனக்கு தான் தெரியும்.
இவ்வாறு டூ போட்டது நடித்துள்ளார் என்பது கூறுவது மிகவும் தவறான ஒன்று ஏனென்றால் அது சாதாரண போட் கிடையாது அதை ஓட்டுவது மிகவும் கடினம் நான் நேரில் அவர் கஷ்டப்பட்டதை பார்த்தேன். ஒரு காட்சிக்காக நாங்கள் ஆறு மணி நேரம் வொர்க் செய்தோம். மேலும் ஒன் மினிட் சூட்டுக்காக கிட்டத்தட்ட 13 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தோம் என அவர் கூறியுள்ளார்.