நடிகை தமன்னா தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர். இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டவர். இப்பொழுதும் கூட பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இதனால் நடிகை தமன்னாவின் மார்க்கெட்டு கீழே இறங்காமல் இருந்து வருகிறது.
தமிழை தாண்டி இவர் கன்னடம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ல் கூட பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் பல படங்கள் வெளியாகி உள்ளன ஒரு சில திரைப்படங்களில் வெளிவராமல் இருக்கின்றன 2022 யை தாண்டி 2023 பல்வேறு படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறார்.
இதனால் சினிமா உலகில் உச்சத்திலேயே இருக்கிறார். அதே அளவிற்கு தனக்கு ரசிகர்கள் வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு தமன்னா அவ்வபொழுது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துவதும் அவரது ஸ்டைல்.. இதனால் நடிகை நடிகை தமன்னாவை பின்பற்றுவது எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தமன்னா பாஜகவில் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம். நடிகை தமன்னா மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் இணைந்து நவராத்திரி திருவிழாவை கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது அவருடன் பாஜக எம் பி மனோஜ் கோடக்கும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தமன்னா பாஜாவிகவில் இணைய உள்ளதாக ஒரு பேச்சியை எழுந்துள்ளது. சமீபகாலமாக திரையுலகில் இருக்கும் பல முன்னணி பிரபலங்கள் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர் அதை அடிப்படையாக வைத்து தான் தமன்னாவும் பாஜகவில் இணைந்து விடுவார் என்று கூறி வருகின்றனர்.