ஹாரி பாட்டர் டம்பில் டோராக நடித்த நடிகர் மரணம்.!

Michael Gambon
Michael Gambon

Harry potter Michael gambon : ஹாலிவுட் திரைப்படம் ஹாரி பாட்டர் இல் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் மைக்கேல் காம்பன் இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

ஹாலிவுட் திரைப்படம் என்றாலே பார்ட் 1 பார்ட் 2 என நீண்டு கொண்டே போகும் அந்த வகையில் ஹாரி பாட்டர் திரைப்படத்தை பற்றி நாம் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை இந்த ஹாரிபாட்டர் திரைப்படம் பல பாகங்களாக வெளியாகி உள்ளது ஹாரி பாட்டர் திரைப்படத்திற்கு இன்னும் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஹாரி பாட்டர் திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் மைக்கேல் காம்பன் இவர் கடைசியாக வெளியாகிய ஹாரி பாட்டர் சிக்ஸில் ஹாக்வார்ட்ஸ் தலைமை ஆசிரியர் ஆல்பஸ் டம்பில் டோராக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.

டம்பில் டோராக நடித்து வந்த மைக்கேல் காம்பனுக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டது இதற்காக அவர் தீவிர சிகிச்சையும் பெற்று வந்தார் இந்த நிலையில் மைக்கேல் காம்பன் சிகிச்சை பலன் இன்றி திடீரென மரணம் அடைந்தார் அவருக்கு வயது தற்போது 82 இவரின் மறைவிற்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் ஹாரிபாட்டர் ரசிகர்களும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் ஹாரி பாட்டர் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமும் மைக்கேல் காம்பன் நடித்த டம்பில் டோர் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அதே போல் இதற்கு முன்பு முதல் இரண்டு ஹாரி பாட்டர் படங்களில் தலைமை ஆசிரியராக டம்பில் டோர் கதாபாத்திரத்தில் நடித்த ரிச்சர்ட் ஹாரிஸ் 2002ல் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.