24 மணிநேரத்தில் சாதனை படைத்த ஹரோல்ட் தாஸ்.! முதன்முறையாக சாதனை படைத்த வில்லன்..

harold das
harold das

Harold Das: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. லியோ படத்தில் சஞ்சய் தத், கௌதமேனன், அர்ஜுன், திரிஷா ஆகியோர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்திருக்கும் நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

எனவே போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. லியோ படத்தில் திரிஷா, கௌதமேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான  முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள லியோவில் மாஸ்டர் திரைப்படத்தினை தொடர்ந்து விஜய் உடன் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்துள்ளார்.

ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனை அடுத்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கர் போன்றவற்றை படக்குழு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு லியோ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டு இருக்கும் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை ஒட்டி அவரது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இவ்வாறு இதனை அடுத்து கடந்த 15ஆம் தேதி நடிகர் அர்ஜுன் லியோ படத்தின் முக்கிய வில்லனாக நடித்திருக்கும் நிலையில் இவருடைய பிறந்தநாள் ஸ்பெஷல்லாக கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அர்ஜுன் லியோ படத்தில் ஹரோல்டு தாஸ் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டரை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது.

மேலும் மாஸாக அதிரடி காட்சிகளின் நடித்து அர்ஜுன் மிரட்டி இருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அர்ஜுனின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 8 லட்சம் லைக்ஸ்களை பெற்று மாஸ் காட்டி இருக்கிறது. தற்பொழுது வரையிலும் 11 லட்சம் லைக்களை பெற்றுள்ளது. வில்லன் கேரக்டரின் கிளிம்ப்ஸ் வீடியோவுக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்வம்  காட்டியுள்ளது லியோ படத்துக்கு தான் என்ற சாதனையை படைத்துள்ளது.