தமிழ்சினிமாவில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் சினிமா உலகில் தன்னை தக்க வைத்துக்கொள்ள சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவது வழக்கம். இருப்பினும் ஒரு சில நடிகர் நடிகைகள் சரியான படங்களை சரியாக தேர்வு செய்யாமல் நடித்து ஆள் அடையாளம் தெரியாமல் சினிமாவை விட்டு ஓடுவதும் உண்டு.
இப்படி சினிமா உலகில் நடப்பது வழக்கம் தான் ஆனால் ஒரு சிலர் தனது தவறை ஒப்புக் கொண்டு அதிலிருந்து மிள தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அதை மறைத்து தமிழ் சினிமாவில் முன்னேறுவது வழக்கம் எப்படி தமிழ் சினிமா உலகில் தற்போது முன்னேறி வருவர் தான் ஹரிஷ் கல்யாண்.
இவர் பொறியாளன், பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்கள் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமடைந்து வருகிறார் இப்படி சமீபகாலமாக சிறப்பான படங்களை தேர்வு செய்து கொண்டு நடித்து வந்தாலும் ஆரம்பத்தில் இவர் சர்ச்சையான படமான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து தனது பெயரை விண்ணாகி கொண்டார்.
இந்த நிலையில் இப்படம் குறித்து அவர் கூறியுள்ளார்.சிந்துசமவெளி படத்தில் நான் நடித்தது 10 வருடங்கள் ஆகிறது ஆனால் இப்படத்தில் ஏன் நடித்தீர்கள் என பலர் என்னிடம் கேட்டுள்ளனர் ஆனால் நான் இந்த படத்தில் விருப்பப்பட்டுதான் நடித்தேன்.
மற்றவர் இது பற்றி கேட்கும் பொழுது எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தற்போது வரையிலும் இருந்து வருகிறேன் என கூறினார் ஹரிஷ் கல்யாண்.