விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று தந்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைவதற்கு காரணமாக அமைந்தது.
இவர் தமிழில் வெளிவந்த சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு போன்ற திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடிடியில் கசடதபற, ஓமண பெண்ணே போன்ற திரைப்படங்கள் வெளியாகி விமர்சனரீதியாக அமோக வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இத்திரைப்படத்தினை பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் வெளிவர இருக்கிறது. மேலும் ரசிகர்கள் இத்திரைப்படத்தில் இதற்காக அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் காதல்,ரொமான்ஸ் என நிறைந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.