திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை.! ஏய் யம்மா என்ன ஆச்சு.. ரசிகர்கள் பதட்டம்

ethirneechal

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்திருக்கும் நிலையில் இவரை தொடர்ந்து யார் குணசேகரன் கேரக்டரில் அறிமுகமாக இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது இந்த சீரியலில் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்துவிட்டு குணசேகரன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பி உள்ளார். எனவே ஞானம், கதிர், விசாலாட்சி அனைவரும் குணசேகரனை நினைத்து கவலைப்பட்டு வரும் நிலையில் குணசேகரன் எழுதி வைத்த லெட்டரை படித்த அப்பத்தா குணசேகரன் மறுபடியும் வருவான் ஆனால் இனிமே வர போற குணசேகரன் கொஞ்சம் ஆபத்தான ஆளு என மருமகளுக்கு பயம் காட்டுகிறார்.

இதனை வைத்து பார்க்கும் பொழுது குணசேகரன் கேரக்டருக்கு விரைவில் புதிய ஒரு நடிகர் அறிமுகமாக இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இவ்வாறு விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து வரும் நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.

எனவே ரசிகர்கள் நந்தினிக்கு என்ன ஆச்சு என பதட்டம் அடைந்து வருகின்றனர். எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டருக்கு அடுத்ததாக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கேரக்டர் தான் நந்தினி. நந்தினி கேரக்டரில் நடித்து வரும் ஹரிப்பிரியாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

haripriya
haripriya

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யம்மா ஏய் உனக்கு என்னம்மா ஆச்சு? என பதிவிட்டு வருகின்றனர். குணசேகரன் கேரக்டர் இந்த சீரியலில் தற்பொழுது இல்லாத காரணத்தினால் டிஆர்பி குறையும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இருந்தாலும் இழந்த இடத்தை மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் பிடித்து வருகிறது.