வாணி ராணி சீரியல் நடிகருடன் காதல் திருமணம் செய்துக் கொண்டு விவாகரத்து பெற்ற எதிர்நீச்சல் சீரியல் நடிகை.! ஆங்கருடன் காதல் கிசுகிசு.. நிஜ வாழ்க்கையிலும் பல கஷ்டங்களை அனுபவித்த ஹரிப்பிரியா

ethir-nichal

சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற தொலைக்காட்சிகள் தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இவ்வாறு சீரியலின் மூலம் அறிமுகமாகும் பிரபலங்கள் விரைவில் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.

அந்த வகையில் சமீப காலங்களாக ஆணாதிக்கத்தை ஒடுக்கி பெண்கள் முன்னேற வேண்டும் எனவே பெண்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தற்பொழுது சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, கமலேஷ், மாரிமுத்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த தொடரில் நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஹரிப்பிரியா.

இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து இருக்கும் நிலையில் முக்கியமாக கனாக்காலம் காலங்கள் சீரியலின் மூலம் இவர் சீரியலுக்கு அறிமுகமானார். அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலிலும் நடித்திருந்த நிலையில் தொடர்ந்து சன் டிவி உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நீங்க முடியாத ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

haripriya
haripriya

நடிகை ஹரி பிரியா கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் தினேஷ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவிலும் பதிவிட்டு வந்தனர். இப்படிப்பட்ட நிலையில் திடீரென இவர்கள் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர்.

இவ்வாறு ஹரிப்பிரியாவின் விவாகரத்திற்கு காரணம் சன் டிவி தொகுப்பாளர் அசார் தான் என்று கூறப்பட்டது. மேலும் இது குறித்து ஹரிப்பிரியா எங்களுக்கு எந்த ஜாதி மதம் எதிர்ப்பும் இல்லை ஒரு பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஒரு ஆண் இருப்பான் அவர் என் காதலனோ, கணவனோ கிடையாது. பின் எப்படி அவர் என்னுடைய ஆத்மார்த்தமான நபராக இருக்க முடியும் அதேபோல் அந்த மனிதர் என்னுடைய பாய் ஃப்ரெண்ட் கிடையாது, காதல் கிடையாது, என் வாழ்க்கைத் துணையும் இல்லை மகிழ்ச்சியாக பேசுவதை என்னுடைய பிறப்புரிமை தவறு என்னுடையது இல்லை பார்வையாளர்களிடம் தான் உள்ளது இதை நல்ல மனதோடு பார்த்தால் தவறாக தெரியாது என்று பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தற்பொழுது இவர் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.