ஒரு காலகட்டத்தில் சமூக வலைதளத்தை பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருந்தார்கள் ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் பலரும் சமூக வலை தளத்தை பயன்படுத்தி தங்களுடைய எண்ணங்களை பதிவிட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் டப்ஸ்மாஷ் செய்து வீடியோவை வெளியிடுகிறார்கள் அது மட்டுமில்லாமல் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பலரும் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.
அதேபோல் யூடியூப் சேனலில் எருமசாணி என்ற சேனல் மூலம் நிறைய குறும்படங்களில் நடித்து ஹீரோயின் அளவிற்கு வளர்ந்தவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு கிடைத்த பேரும் புகழும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.
இந்தநிலையில் 2018ஆம் ஆண்டு தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த சீனியர் ஒருவரை காதலித்து வந்தார் அவர் பெயர் அமர் ரமேஷ் சமீபத்தில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவருடன் இணைந்து திருவிளையாடல் என்ற புது யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களை நடித்து வந்தார். ஹரிஜா அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் அடிக்கடி தலைகாட்டி வருவார். எருமசாணி யூடியூபில் ஹரிஜா கூறும் “போடா எரும சாணி கிறுக்கு பயலே” என்ற வசனம் இன்னும் இளசுகள் மத்தியில் பிரபலம் துருதுருவென குழந்தை போல் பேசி ரசிக்க வைத்த ஹரிஜா தற்பொழுது தன்னுடைய சமூக வலைதளத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.