யானை திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் பெயரை ரிஜெக்ட் செய்த ஹரி.! வருத்தமாக கூறிய பிரியா பவானி சங்கர்..

yaanai-movie
yaanai-movie

நடிகர் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் யானை. இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ்சாகும் என்று அறிவித்திருந்த நிலையில் மேலும் ரிலீஸ் தேதி மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

ஏனென்றால் யானை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதற்கு முக்கிய காரணம் நடிகர் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் தான் என்று கூறியுள்ளார்கள்.  ஏனென்றால் விக்ரம் திரைப்படம் வெளிவந்து திரையரங்குகளில் அனைத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

எனவே விக்ரம் திரைப்படத்தின் மேல் வைத்துள்ள மரியாதையின் காரணமாக தான் நாங்கள் யானை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை 1ஆம் தேதிக்கு மாற்றி உள்ளோம் என இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் நடிகர் கமலஹாசனை இயக்குனர் ஹரி மற்றும் அருண்விஜய் ஆகியோர்கள் நேரில் சந்தித்த விக்ரம் திரைப்படத்தின் வெற்றி பெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் யானை திரைப்படத்தினை பற்றி அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர்,ராதிகா, அம்மு அபிராமி,  சமுத்திரக்கனி, சஞ்சீவ்,  பாரதிராஜா உள்ளிட்ட ஏராளமான கேரக்டர்கள் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் சமீப பேட்டி ஒன்றில் ஆடியோ லான்ச் பொழுது ஹாரி சார் சொல்லி தான் தெரியும் அதாவது படம் ஆரம்பிக்கும் பொழுது புரோடக்சன் சைடில் இருந்து நடிகைகளின் லிஸ்ட் கொடுத்தார்கள்.

ஆனால் அந்த லிஸ்டில் பிரியா பவானி சங்கர் பெயர் இருந்த பொழுது அந்த நடிகை வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாராம் ஹரி. ஏனென்றால் அப்போதுதான் மாபியா திரைப்படம் வெளிவந்தது பிறகு சில நாட்கள் கழித்து தான் ஆடிஷனுக்கு வருமாறு கூறினார்களாம்.