பல வருட நட்பில் ஏற்பட்ட விரிசல்..! சூர்யாவிற்கு எதிராக மச்சானை வைத்து காய் நகர்த்தும் ஹரி..!

hari-2

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஹரி இவர் சூர்யாவை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் அந்த வகையில் இவர்களின் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சிங்கம்.

இவ்வாறு சூர்யாவை வைத்து பல்வேறு திரைப்படத்தை இயக்கி வந்த நமது இயக்குனர் ஹரியும் சூர்யாவும் மிக நெருங்கிய நண்பராக திகழ்ந்து வந்தார்கள் இவ்வாறு இவர்களுடைய நட்பை பார்த்து பலரும் பொறாமைப்படும் அளவிற்கு இருந்தன.

அந்த வகையில் தற்போது இவர்களுடைய நட்பில் ஒரு விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஹரி சமீபத்தில் சூர்யாவிடம் ஒரு கதையை கூறியுள்ளாராம் ஆனால் அந்த கதை சூர்யாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம் பின்னர் அதே கதையை வைத்து தன்னுடைய மச்சான் அருண் விஜயை வைத்து இந்த திரைப்படத்தை இயக்க முடிவு செய்துவிட்டாராம்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் டைட்டில் யானை என பெயரிடப்பட்டுள்ளது மேலும் இத்திரைபடத்தின் பர்ஸ்ட் லுக் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று தந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற கிறிஸ்மஸ் அன்று வெளியாக போகும் எதற்கும் துணிந்தவன் திரை படத்துடன் மோத போவதாக கூறப்படுகிறது.

hari-1
hari-1

இவ்வாறு முதன்முதலாக  சூர்யாவுக்கு எதிராக  இத்திரைப்படத்தை ஹரி வெளியிட உள்ளார்.  அந்த வகையில் இந்த திரைப்படத்தை எப்படியாவது மெகா ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஹரி சூர்யா இந்த திரைப்படத்தை ஏன்டா மிஸ் செய்தோம் என்று நினைக்கும் அளவிற்கு இயக்கி உள்ளாராம்.