அஜித்துக்காக super hero கதையை ரெடி பண்ணி வைத்திருக்கும் ஹரி.? ஒன் லைன் கதையை சொல்லி அசத்தல்.!

hari
hari

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஆக்சன் படங்களை கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில் அவர் இயக்கிய ஆறு, ஐயா, சாமி, சிங்கம், வேல், அருள் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்தன.

இந்த படங்களைத் தொடர்ந்து அண்மையில் அருண் விஜய்யை வைத்து யானை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.  படத்தில் அருண் விஜய் உடன் ராதிகா சரத்குமார், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி  போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது இந்த படம் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி இருவருக்குமே ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது.  படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் ஹரி பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் ஹரி அஜித் குமார் குறித்து பேசினார் அதில் அவர் சொன்னது. அஜித்தை வைத்து படம் எடுக்க எனக்கு ரொம்ப ஆசை அவருக்கு ஆக்சன் சூப்பராக செட் ஆகும். அவருக்கு எந்த மாதிரி கதையை உருவாக்குவேன் என்றால் ஒரு உலகமே அழிவை நோக்கி இருக்கிறது

அதை யாருக்கும் தெரியாமல் தனி ஆளாக வந்து கண்டுபிடித்து எதிரிகளை அழிப்பது போன்ற ஒரு கதையில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறினார் சொல்லப்போனால் ராபின் உட் படம் எப்படி இருந்ததோ  அதேபோல அஜித்தை வைத்து படம் எடுத்தால் நிச்சயம் படம் நன்றாக இருக்கும் என கூறினார்.