ஹரியின் ஆட்டம் ஆரம்பம் வெளியானது அருண்விஜய் நடிக்கும் யானை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

arun vijay yaanai
arun vijay yaanai

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரத்து அதிகரித்து கொண்டேதான் செல்கிறது ஆனாலும் வாரிசு நடிகர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில்  பல வாரிசு  நடிகர்கள் சினிமாவில் சாதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் வாரிசு நடிகராக இருந்தாலும் சினிமாவில் சாதித்து வருகிறார் ஆரம்ப காலகட்டத்தில் இவர் தொடர்ந்து தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்தார் அதன் பிறகு தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் வெற்றி படங்களை கொடுத்து சினிமாவில் சாதித்து காட்டியவர். இவர் முதன்முதலாக அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கொடுத்துள்ளார் இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது இந்தநிலையில் அருண்விஜய் சினம், பாக்சர், அக்னிசிறகுகள், பார்டர் என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஹரி இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரோடக்சன் தயாரித்து வருகிறது. அருண் விஜய் திரை பயணத்திலேயே அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் தான் நடிகையாக நடிக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படத்தில் யோகிபாபு, குக்  வித்து கோமாளி புகழ், அம்மு அபிராமி, கேஜிஎஃப் புகழ் கருடா ராம் என பல பிரபலங்களும் நடிக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ்குமார் இசையில் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் பூஜையுடன் தொடங்கியது. ஆனால் இடையில் கொரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது தற்பொழுது கொரோனா குறைந்ததன் காரணமாக படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு யானை என பெயரிட்டுள்ளது படக்குழு இதன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.