World Cup 2023 : உலகக்கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பல பரிட்சை நடத்தின டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் இதனை அடுத்து பாகிஸ்தான அணி பேட்டிங் விளையாடியது.
ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த விக்கெட்டை கொடுத்தது அதன் பிறகு பாபர் ஆசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியவர்கள் இணைந்து அவ்வபொழுது பவுண்டரிகளை அடித்து ரன்களை உயர்த்தினர் இந்த இரண்டு பேரும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தனர் பாபர் ஆசாம் 50 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார்.
அதன் பின்னர் பும்ரா தனது மாயாஜாலத்தை காட்டினார். ரிஸ்வான், சதாப் ஆகியவர்களின் விக்கெட்டை எடுத்தார். மற்ற இந்திய பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் அணியை 191 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து இந்திய அணி களம் இறங்கியது. ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியை காட்டினார்.
6 சிக்ஸர் 6 பவுண்டரைகள் அடித்து 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார் சுமன் கில், விராட் கோலி 16 ரன்கள் எடுத்தனர். ஐயர் 53 ரன்கள் கே.எல். ராகுல் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர். இந்த போட்டியின் போது ஹார்டிக் பாண்டியா கையில் பந்து வைத்துக்கொண்டு ஏதோ மந்திரம் போட்டு விக்கெட்டை எடுத்தார் என செய்திகள் வெளி வருகின்றன.
இது குறித்து பாண்டியா விளக்கம் கொடுத்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. நான் கையில் பந்தை வைத்துக் கொண்டு என்னை நானே உற்சாகப்படுத்தும் வகையில் சில வார்த்தைகளை கூறிக் கொண்டேன். பந்தை சரியான இடத்தில் போட வேண்டும் என்று தேவையில்லாத முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் மத்தபடி எந்த மந்திரமும் இல்லை எனக் கூறியுள்ளார்.