விவாகரத்தை அறிவித்த ஹர்திக் பாண்டியா ஜீவனாம்சமாக நடாஷாவுக்கு எவ்வளவு கொடுத்தார் தெரியுமா..

பிரபலம் என்று வந்து விட்டாலே ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அது மிகப்பெரிய பேசும் பொருளாக ஆகிவிடுகிறது அந்த வகையில் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வந்தவர் நடாஷா.

இவர் தமிழிலும் அரிமா நம்பி என்ற திரைப்படத்திலும் நானும் உன்னில் பாதி என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார் அதேபோல் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியவர். இவர் முன்னதாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள் இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளத்தில் செய்திகள் காட்டுதியாய் பரவி வந்தது அந்த வகையில் உலக கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியாவுக்கு கேரியரில் ஏற்ற தாழ்வுகள் இருந்து வந்தது.

அப்படி இருக்கும் நிலையில் இருவரும் இணைந்து அதிகாரப்பூர்வமாக தங்களுடைய விவாகரத்தை அறிவித்துள்ளார்கள் நடாஷா நேற்று அவருடைய சொந்த நாடான செரீபியாவுக்கு மகனை அழைத்துச் சென்றுள்ளார் இதற்கு முன்பே இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் செய்தி வைரல் ஆகி வந்த நிலையில் தற்போது 70 சதவீத சொத்தை தன்னுடைய முன்னாள் மனைவி நடாஷாவுக்கு ஹர்திக் பாண்டியா எழுதி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version