ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரித்துள்ள படம் பிரண்ட்ஷிப். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகின்றன. மட்டுமில்லாமல் பிசியாக இருக்கும்போது போட்டோ ஷூட்டுகளுடன் ஈடுபட்டு தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார் அவரது படத்தில் ஹீரோயினாக லாஸ்லியா அவர்கள் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் முன்னணி நடிகரான ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் இணைந்திருப்பது படக்குழுவிற்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது இப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரான வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
சமீப காலங்களில் அர்ஜுன் அவர்கள் ஹீரோயினுக்கு வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். நிலையில் தற்பொழுது அவர் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் ஹர்பஜன் சிங் அவர்களுக்கு வில்லனாக அர்ஜுன் அவர்கள் நடிக்க உள்ளார். இப்படத்தைப் பற்றி வேறு எந்த தகவலும் வெளிவராத நிலையில் உள்ளது.
Action king @akarjunofficial on board in @harbhajan_singh & #Losliya #Friendship @JPRJOHN1 @ShamDirector @ImSaravanan_P @RIAZtheboss #SeantoaStudio #cinemaasstudio pic.twitter.com/l0ifmNo6zB
— CINEMAAS STUDIOS (@CinemaassS) February 17, 2020