ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் : ஒரு வழியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புஷ்பா திரைப்படம் – எந்த டிவியில் தெரியுமா.?

puspa
puspa

சமீபகாலமாக தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட பட்ஜெட் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கியது இந்த படத்தின் கதையை பெரிது என்பதால் இரண்டு பாகங்களாக எடுத்து வருகின்றனர்.  முதல் பாகம் அண்மையில் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

இந்த படம் ஹிட் அடிக்க முக்கிய காரணம் இதுவரை பெரிய அளவில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து படங்கள் வெளியானது கிடையாது இந்த படம் வித்தியாசமாகவும் அதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் மிரட்டும் வகையில் இருந்ததால் இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்திழுத்தது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்த சமந்தா ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் டாப் நடிகர், நடிகைகள் சிறப்பாக நடித்து அசத்தினார். இந்த படம் தெலுங்கை தாண்டி தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகியது. அங்கேயும் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்று அசத்தியது. முதல் பாகம் 365 கோடி வசூல் வேட்டை நடத்தி அசத்தியது.

அதை தொடர்ந்து அதன் அடுத்த பாகமும் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் மக்கள் மற்றும் ராசிகர்களுக்கு நல்ல செய்தியை புஷ்பா திரைப்படம் கொடுத்துள்ளது இதுவரை திரையரங்கில் பார்த்து வந்த புஷ்பா திரைப்படம் ஒரு வழியாக தற்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

அது வேற எந்த தொலைக்காட்சியிலும் இல்ல மக்கள் அதிகமாக பார்த்து கண்டுகளித்து வரும் விஜய் டிவி தொலைக்காட்சியில் தான் அல்லு அர்ஜுன் மிரட்டி உள்ள  புஷ்பா திரைப்படம் வெளியாக இருக்கிறது ஆனால் இப்பொழுது எந்த நேரத்தில் படம் வெளியாகும் என்பது தெரியவில்லை.