பிறந்தநாள் காணும் தனுஷ் அவர்களுக்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்.!

dhanush birthday
dhanush birthday

Dhanush Birthday : நடிகர் தனுஷ் ஜூலை 28 என்று தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார், அது மட்டுமல்லாமல் ரசிகர்களும் தனுஷ் பிறந்த நாளை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அதே போல் தனுஷ் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கேப்டன் மில்லர் பட குழு டீசரை வெளியிட்டு வாழ்த்து கூறியது நேற்று நள்ளிரவு 12.01 மணிக்கு கேப்டன் மில்லர் டீசரை வெளியிட்டார்கள்.

மேலும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் சிவராஜ் குமார், சுதீப் கான், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார் அதனால் கண்டிப்பாக பாடல் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் மில்லர் படம் தனுஷிற்கு 47-வது திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தில் புரட்சித் தலைவர் போல் நடிகர் தனுஷ் நடித்துள்ளார் அதாவது ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது அவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் புரட்சித் தலைவர் போல் இந்த திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் பிரியங்கா அருள் மோகன் இந்தக் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார்.

இந்த நிலையில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் தனுஷ் பிறந்த நாளுக்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளார்கள் இதோ அவர்களின் வாழ்த்து மடல்.

அப்படி இருக்கும் வகையில் இயக்குனர் பாரதிராஜா தன்னுடைய ஸ்டைலில் என் மீது பேரன்பு கொண்ட பாசத்துக்குரிய பிள்ளை தம்பி தனுஷ் மேன்மேலும் வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா வளங்களும் மகிழ்ச்சியுடன் சிறப்புடன் வாழ இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார். அதேபோல் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்து வரும் ஆர்த்தி பெயர் பதவி பட்டம் என்னும் மழைக்கு ஒதுங்கும் பறவைகள் போல அல்லாமல் மழை மேகங்களை தாண்டி வானில் உயர பறக்கும் அசுரக் கழுகு தனுஷ் சார் தரமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் சன் பிக்சர்ஸ் ஸ்டுடியோ கிரீன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களும் தனுஷ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.