சந்தோஷத்தில் மிதக்கும் செல்வராகவன்.! வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்.

selvaragavan

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டு இருப்பவர் இயக்குனர் செல்வராகவன் இவர் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வரலாற்றில் இடம் பிடிக்கும் படங்களாக இருந்து வருகின்றனர் கே பாலச்சந்தர்  பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்களை தொடர்ந்து சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை பிடித்துள்ளார் செல்வராகவன்.

இவர் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர் முதல் படமே அதிரிபுதிரி ஹிட் கொடுத்தன் மூலம் தமிழ் சினிமாவில் இவரை வைத்து இயக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர் அந்த வகையில் இவர் அவசரப்படாமல் நிதானமாக திரையுலகை கையாண்டு அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார் அந்த வகையில் இவர் புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, செவன் ஜி ரெயின்போ காலனி போன்ற படங்கள் இவர் தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்றவர் இயக்குனர் செல்வராகவன்.

இப்படி சினிமா உலகில் சிறப்பாக வந்தாலும் வாழ்க்கையில் பல தடங்கல்கள் ஏற்பட்டன அந்த வகையில் இவர் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் பொழுது சோனியா அகர்வால் மீது காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார் இருப்பினும் இவர்களால் நீண்ட காலம் வாழ முடியவில்லை இடையில் சில பிரச்சனைகள் எழத் தொடங்கின அதன் காரணமாக இவர்கள் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர் இதனைத் தொடர்ந்து அவர் 2011ம் ஆண்டு உதவி இயக்குனரான கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன்.

கீதாஞ்சலி இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்தில் போது செல்வராகவனுடன் உதவி இயக்குனராக பணியாற்றினார் அப்பொழுது காதல் மலர்ந்தது பின் கல்யாணத்தில் முடிந்தது அதன் பின்னர் இவர்கள் இருவருக்கும் லீலாவதி என்ற ஒரு பெண் குழந்தையும் ,ஓம்கர் என்ற ஒரு ஆண் குழந்தையும் பெற்று எடுத்தனர். இந்த நிலையில் தற்போது செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆகியுள்ளார் இப்புகைப்படம் சமீபத்தில் வெளியானது.

அதனை மீண்டும் வெளிக்காட்டும் வகையில் தற்பொழுது அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் கீதாஞ்சலி இதைப் பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் செல்வராகவன் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

keethanjali
keethanjali