நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தது மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் பிடித்த நடிகையாக மாறியதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.
அந்த வகையில் நடிகை ஹன்சிகா விஜயுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம், சிவகார்த்திகேயன் உடன் மான்கராத்தே, ஜெயம் ரவி உடன் போகன் என பல்வேறு படங்களில் தொடர்ந்து முக்கிய நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் இருப்பினும் நடிகை ஹன்சிகா இளம் வயதிலேயே சற்று கொழுக் மொழுக்கென்று இருந்ததால் ரசிகர்கள் இவரை குட்டி குஷ்பூ என கூப்பிட ஆரம்பித்தனர்.
‘மேலும் உங்களால் பிக்னிக் டிரஸ் போன்றவை போட முடியாது என கமெண்ட்களின் மூலம் வறுத்து எடுத்தனர். இதை உணர்ந்து கொண்ட ஹன்சிகா திடீரென சினிமாவுக்கு லீவு விட்டு தனது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தினார் ஒரு வழியாக தற்பொழுது உடல் எடையை குறைத்து செம பிட் ஆக மாறி பட வாய்ப்புகளை அள்ளிப் வருகிறார்.
அண்மையில் ஹன்சிகா மற்றும் சிம்பு நடிப்பில் வெளியான மகா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று ஓடுகிறது ஆனால் வசூல் ரீதியாக மட்டும் பின்தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் ஒரு கோடியை தொடாத மஹா திரைப்படம் இரண்டு நாள் முடிவில் சுமார் 1.2 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
வசூல் இரண்டு நாட்களில் குறைந்துள்ளதால் மஹா படகுழுவும் செம்ம அப்செட்டில் இருக்கிறது மேலும் தற்பொழுது மஹா திரைப்படம் போட்ட காசை எடுத்தால் போதும் என்ற நிலைமையில் இருக்கிறதாம். ஹன்சிகாவுமே சற்று வருத்தத்தில் தான் இருக்கிறாராம் காரணம் ஹன்சிகாவுக்கு இது 50-வது படம் இப்படி ஆகிடுச்சு என புலம்பி வருகிறாராம்.