ஹன்சிகாவின் “மஹா” திரைப்படம் – முதல் நாள் முடிவில் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா.?

maha-
maha-

நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் நடிகை ஹன்சிகா விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு என முன்னணி நடிகரின் படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்தி கொண்டார். ஆள் பார்ப்பதற்கு சற்று கொழுக் மொழுக்கென்று இருந்ததால் ரசிகர்கள் அனைவரும் இவரை குட்டி குஷ்பு என அழைத்தனர்.

இது ஹன்சிகாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை உடனே நடிகை ஹன்சிகா அதிரடியாக தனது உடல் எடையை குறைக்க ஆரம்பித்தார் இதனால் அவர் சினிமாவுக்கு சிறிது லீவு விட்டார் ஒரு வழியாக அதிரடியாக உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆள் பார்ப்பதற்கு ஹன்சிகா தற்பொழுது சூப்பராக இருப்பதால் வாய்ப்புகளும் ஏராளமாக குவிக்கின்றன.

தமிழில் மஹா, ரவுடி பேபி மற்றும் ஒரு சில படங்களில் கமிட் ஆகி உள்ளார் முதலாவதாக மஹா திரைப்படம் நேற்று திரையரங்கில் கோலாகலமாக வெளியாகின. படம் முழுக்க முழுக்க திரில்லர் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது நிச்சயம் இந்த படம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மஹா படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து சிம்பு மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்து அசத்தி உள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் மஹா திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது முதல் நாளில் ஒரு கோடி கூட வசூல் செய்யாமல்தடுமாறி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் தற்பொழுது வசூல் ரீதியாக முதல் நாளே சரிவை சந்தித்துள்ளது. முதல் நாளை வைத்து எந்த ஒரு படத்தையும் நாம் தீர்மானித்து விட முடியாது அடுத்த அடுத்த நாட்கள் நல்ல வரவேற்பு பெற்று வசூல் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம் ஹன்சிகா ஜெயிப்பாரா… வீழ்வாரா…