ஹன்சிகா முதுகில் ஹாயாக படுத்துக்கிடக்கும் சிம்பு.! மஹா புதிய போஸ்டரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

simbu

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் 2003 ஆம் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதன் பிறகு பாலிவுட்டில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் இவர் 2007 ஆம் ஆண்டு தேசமுடுரு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் இவர் முதன்முதலில் வேலாயுதம் என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிப்பில் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு என பல திரைப்படங்கள் வெளியானது.

இப்படி தொடர்ந்து நடித்து வந்த ஹன்சிகா அவர்களுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை அதனால் சிறிது காலம் நடிப்பிற்கு முழுக்கு போட்டார். அதற்கு காரணம் இவருக்கு உடல் எடை அதிகரித்ததால்  பட வாய்ப்பு குறைந்துவிட்டது என எண்ணி தனது உடல் எடையை அதிரடியாகக் குறைக்க ஆரம்பித்தார்.

தற்பொழுது தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார் இந்தநிலையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான மஹா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் விரைவில் சிம்புவின் காட்சிகள் படமாக்கப்படும் என வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் புதிய போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளார்.

memes
memes

சிம்பு மற்றும் ஹன்சிகா படுத்து இருக்கும் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள். ஒரு ரசிகர் அண்ணே சிம்பு சூட்டிங் வராமல் தூங்குறாரு எனக் கூறுவது போலவும் அத அப்படியே போட்டோ எடுத்து ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணு எனவும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.