நடிகை ஹன்சிகா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அதன் பிறகு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஹன்சிகா அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகை ஹன்சிகாவை குட்டி குஷ்பு என பலராலும் அழைக்கப்பட்டார். இப்படி பிரபலமான நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார் இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், போன்ற பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்படி பிசியாக இருந்து வரும் நடிகை ஹன்சிகா தற்போது திருமணம் செய்ய போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அது மட்டுமல்லாமல் நடிகை ஹன்சிகாவை தனது காதலரான சோஹைல் கதுரியா ஈபில் டவர் முன்பு நடிகை ஹன்சிகாவுக்கு ப்ரொபோஸ் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது. இவர்களது திருமணம் ஜெய்பூரில் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களது திருமண விழாவிற்கு நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவும் மற்ற நடிகைகளை போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.