தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் தற்பொழுது இவர் கையில் மகா திரைப்படம் மட்டுமே இருக்கிறது.
இவர் தமிழ் சினிமாவில் வேலாயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக 2003ஆம் ஆண்டு ஹிந்தியில் அறிமுகமானார். வேலாயுதம் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 ஆகிய சில திரைப்படங்களை தொடர்ந்து நடித்து வந்தார்.
கொழு கொழு தேகத்துடன் இவர் இருப்பதால் ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. அதனால் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்தார், இந்த நிலையில் தற்போது தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
இவர் செய்யும் க்யூட் ரியாக்ஷன்களை சமூக வலைத்தளத்தில் பயன்படுத்த கிப் இமேஜ் ஆக மாற்றி வெளியிட்டுள்ளார்கள். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, மேலும் ஹன்சிகா ரியாக்சன் க்யூட்டாக இருக்கிறது என கூறுகிறார்கள். ஹன்சிகா தற்போது மகா திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் ஹன்சிகாவின் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகிறார்கள்.
மேலும் மகா திரைப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சிம்பு-ஹன்சிகா, இருவரும் முன்பு காதலித்தார்கள். ஆனால் ஒரு காலகட்டத்தில் பிரிந்து விட்டார்கள் பின்பு மீண்டும் ஹன்சிகா, சிம்பு மகா திரைப்படத்தின் மூலம் திரையில் ஒன்று செய்துள்ளார்கள்.
இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்தாலும் ஹன்சிகாவுடன் சிம்பு நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். கொரன் ஓஎல்எஸ் மிக வேகமாக பரவி வருவதால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் என தெரிகிறது.
https://t.co/BXoQSQxmSC pic.twitter.com/70u0Xca58P
— Hansika (@ihansika) March 28, 2020