ஓல்லி பெல்லியாகி சிவப்பு நிற உடையில் செல்பி எடுக்கும் ஹன்ஷிகா.! வைரலாகும் புகைப்படம்!!

hansika
hansika

Actress Hanshika taking selfie in the red dress: விஜய் நடிப்பில் வெளிவந்த வேலாயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. இதனை தொடர்ந்து அவர் தமிழில் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2,  போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தமிழ் திரையுலகை போல ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் ஒரு ரவுண்ட் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. ஏனென்றால் அவர் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கின என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை உணர்ந்த ஹன்சிகா அவர்கள் தற்போது உடல் எடையை குறைத்து பிட்டாகி வருகிறார்.

தற்பொழுது அவர் தமிழ் சினிமாவில் மகா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் தனது பழைய இடத்தை திரும்ப மீட்பார் ஹன்சிகா என கூறி வருகின்றனர்.சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அவர்கள் சமீபத்தில் உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வந்தார்.

அந்த வகையில் தற்போது அவர் சிவப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை குதுகல படுத்தியுள்ளார்கள்.அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.