நடிகை ராதிகாவின் டுவிட்டர் கணக்கில் தங்களுடைய கைவரிசையை காட்டிய ஹேக்கர்ஸ்..! முன்னெச்சரிக்கையாக நடிகை ராதிகா செய்த செயல்..!

rathika-1
rathika-1

சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது வழக்கம் தான் அந்த வகையில் பல்வேறு சினிமா பிரபலங்களும் டுவிட்டர் என்ற வலை தளத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.  அந்த வகையில் இந்த செயலி மூலமாக தங்களுடைய பதிவுகள் புகைப்படங்கள் என பலவற்றையும் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சில ஹேக்கர்கள் முன்னணி நடிகைகள் பிரபலங்கள் என அவர்களுடைய கணக்குகளையும் தேடித் தேடி சென்று ஹேக் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள் மேலும் இதற்கு முன்பாக பல பிரபலங்களின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது பிரபல நடிகை ராதிகாவும்  பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கம் சிலரால் முடக்கப்பட்டுள்ளது என்ற தகவலை நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

அவர் தன்னுடைய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாய் நண்பர்களே என்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது ஆகையால் அதில் இருந்து வரும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்.

மேலும் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் விரைவில் இது சரி செய்யப்பட உள்ளதாகவும் ராதிகா தன்னுடைய இன்ஸ்டா  பக்கத்தில் ரசிகர்களிடம் கூறியுள்ளார். நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் நடிகர் சரத்குமாரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை என்னதான் அவருக்கு வயது முதிர்ந்தாலும் இதுவரை திரைப்படத்தில் நடிப்பதை சின்னத்திரையில் நடிப்பதையும் ஒரு போதும் நிப்பாட்டி அதே கிடையாது என் நிழலில் இவருக்கு இப்படி ஒரு சம்பவம் நேரிட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.