லாஸ்லியாவுக்கு தெரியாமலேயே இன்ஸ்டாகிராமில் போட்டோவை அள்ளி வீசிய ஹேக்கர்கள் – வைரலாகும் புகைப்படம்.

losliya
losliya

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து காணப்படுபவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் பின்பு தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டு இந்த நிகழ்ச்சியின் நீண்ட தூரம் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களில் ஒருவரான கவினுடன் லாஸ்லியாவிற்கு காதல் கிசுகிசு பேசப்பட்டு வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் லாஸ்லியாவுக்கு ஆர்மி எல்லாம் உருவாகின.

இந்த நிகழ்ச்சியியை அடுத்து தொடர்ந்து தமிழில் பல திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் முதல் படமாக ஹர்பஜன்சிங் உடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா திரைப்படத்தை கொடுத்திருந்தார்.

இந்த படமும் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது.இதைத்தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து டாப் நடிகைகள் போல் மாற வேண்டும் என்ற எண்ணத்தில் லாஸ்லியா தனது உடம்பை ஸ்லிம்மாக மாற்றிக்கண்டு பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று லாஸ்லியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டு சில புகைப்படங்களும் அவரது கணக்கில் பதிவிட்டு இருகின்றனர் பின்பு லாஸ்லியா தனது கணக்கு ஹேக்கர்கள் இடமிருந்து மீட்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருக்கிறார்.

lolsiya
lolsiya