எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் கடைசியாக நடித்து வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த சமூக நோக்கமுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.
இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வினோத் மற்றும் போனிகபூர் தல அஜித்தை விடாமல் அவரின் 60வது திரைப்படமான வலிமை திரைப்படத்தை எடுத்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இயக்குனர், தயாரிப்பாளர், அஜித் மற்றும் திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் படக்குழுவோ இந்த திரைப்படத்தைப் பற்றி எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தனர்.
இப்படி ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வினோத் அவரது ட்விட்டர் பக்கத்தில் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ தயாராகி விட்டது விரைவில் வெளியாக உள்ளது என கூறியுள்ளார்.
இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் வலிமை மோஷன் போஸ்டர் ஹேஸ்டாக் என பதிவிட்டு தற்போது இந்த ட்விட்டை வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த ட்விட்.
#ValimaiMotionPoster Getting Ready! 😎💥#Valimai #AjithKumar
— HVinoth (@HvinothDir) March 2, 2021