தளபதி நடித்துள்ள வாரிசு திரைப்படம் திரையரங்கிற்கு வருவதற்கு முன்பு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவது தளபதி 67 திரைப்படத்திற்கு தான். தளபதி 67 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருக்கிறார் கமல், விஜய் சேதுபதி, பகத் பாஸில் ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜயுடன் தளபதி 67 திரைப்படத்தில் இணைய இருக்கிறார் இதற்கு முன்பு லோகேஷ் கனராஜ் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தில்ராஜ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கி வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு தமன் தான் இசையமைத்துள்ளார் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது அந்த பூஜையில் பட பிடிப்பில் கலந்து கொள்ளும் பல நடிகர் மற்றும் நடிகைகள் பூஜையில் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில் தளபதி 67 திரைப்படம் குறித்து துணிவு பட இயக்குனர் எச் வினோத் அவர்கள் ஒரு பேட்டி ஒன்றில் பேசியுள்ளது இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது அவர் கூறியதாவது பான்இந்தியா திரைப்படம் என்றால் அதனை முதல் நாளில் இருந்து முடிவு செய்து இந்தியா முழுவதும் சந்தை படுத்தத் தொடங்க வேண்டும் அதேபோல் இதுவரை டாப் நடிகர்களான அஜித் விஜய் திரைப்படங்கள் தமிழ் மார்க்கெட்டை குறி வைத்துதான் உருவாக்கப்பட்டு வந்தன ஆனால் அவர்களின் படங்கள் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெறுவதால் இனிமேல் அவர்களின் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பாகுபலி மற்றும் கேஜிஎப் திரைப்படங்கள் பான்இந்தியா திரைப்படமாக உருவாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் அஜித் விஜய் திரைப்படங்களும் வெற்றி பெறும் எனவும் அதனால் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் தளபதி 67 திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக திட்டமிடப்படுவதாக நான் நினைக்கிறேன். எனவே அதற்கு ஏற்றவாறு கதை நட்சத்திரங்கள் தேர்வு செய்து திட்டமிடப்படும் என கூறியுள்ளார் துணிவு படத்தை இயக்கிய h வினோத் இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே ஆர்வத்தையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தளபதி 67 திரைப்படத்தில் இணைந்து உள்ளதால் இந்த திரைப்படத்தில் விஜய் 40 வயது கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அது மட்டும் இல்லாமல் தளபதி 67 திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.