தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வினோத் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வலிமை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள்தான் தயாரித்திருந்தார் இந்த திரைப்படம் சமீபத்தில் தான் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் நமது இயக்குனர் முதன்முதலாக இயக்குநராக அறிமுகம் ஆனது எனவோ சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தான்.
இந்த திரைப்படத்தில் நமது இயக்குனர் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் திருட்டு சம்பவங்களையும் வெளிச்சம் போட்டு காட்டியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது இதை தொடர்ந்து கார்த்திக் உடன் கூட்டணி வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வெற்றி கண்டார்.
இவ்வாறு இந்த திரைப்படம் பல்வேறு பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளை வைத்து எடுக்கப்பட்டதன் காரணமாக இந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் கீட்டானது மட்டும் இல்லாமல் நமது இயக்குனர் வினோத்துக்கு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வினோத் தற்போது ak 61 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு பிறகாக வினோத் அவர்கள் இயக்கும் திரைப்படம் பற்றிய செய்திகளை இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தில் மாஸ் காட்டிய விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க போவதாக சமூக வலைதளப் பக்கத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.